விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு பந்துவீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம்

(UTV|பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான மொஹமட் ஹபீஸுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

மொஹமட் ஹபீஸ் பந்தை வீசி எறிகிறார் எனும் சந்தேகத்தை கடந்த வருடத்தில் நடுவர்கள் வெளிப்படுத்தினர். அவர் பந்துவீசும் போது மணிக்கட்டு 15 பாகைக்கு மேல் வளைவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக இங்கிலாந்தின் லோபோரோ பல்கலைக்கழகம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், இதன்போது ஹபீஸின் பந்துவீச்சு பாணியில் தவறில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொஹமட் ஹபீஸ் பந்துவீச விதிக்கப்பட்ட த​டையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Related posts

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு

தலைமை பயிற்சியாளராக சாமர சில்வா நியமனம்

editor

உலக சம்பியன் மெய்வல்லுனர் போட்டிக்கு நிமாலி லியனாராச்சி தகுதி