சூடான செய்திகள் 1

பஸ்ஸினுள் புகுந்த மூங்கில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

(UTV|HATTON)-நோட்டன் பிரிட்ஜ்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் மஸ்கெலியா பிரதானவீதியில் பயணித்த பஸ் வண்டியினுள் மூங்கில் மரமொன்று உடைந்து  ஊடருத்தமையினால் பஸ்வண்டி சேதமாகியுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ்  பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கிச்சென்ற இ.போ.ச பஸ் வண்டியே 09.07.2018 கா லை 6.30 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான இ.போ.ச பஸ் வண்டியானது சீடன்  பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது பதையோர மேல் பகுதியிலிருந்த மூங்கில் தோப்பிலிருந்து மூங்கிலொன்று உடைந்து பஸ் வண்டியின் முன் பகுதியில் குத்துண்டு உள்ளே பாய்ந்தமையினால் பஸ் வண்டி சேதயாகியுள்ளது மேலும்   சம்பவத்தின் போது பயணிகள் யாரும் பஸ் வண்டியினுள் இல்லை என்றும் சாரதி மற்றும் நடத்துனர்தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

UPDATE-பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவு

பிரதமர் தலைமையில் ஆறாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”