வகைப்படுத்தப்படாத

பஸ் கட்டணம் – விசேட பேச்சுவார்த்தை எதிர்வரும் 20ம் திகதி

(UDHAYAM, COLOMBO) – பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை அரசாங்கம் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளப்படவில்லை.

பஸ் சங்கங்களினால் தற்போது பஸ் கட்டண திருத்தத்திற்கானகோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைய ஒவ்வொருவருடமும் ஜுலை மாதம் 1ம் திகதி பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதி விசேட கலந்துரையாடல் இடம்பெற்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்ஹ தெரிவித்தார்.

குறைந்த பட்ச கட்டணம் 6 முதல் 7 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என தான் அரசாங்கத்திற்குயோசனை முன்வைத்திருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னதெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இனை தெரிவித்தார்.

பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

England win Cricket World Cup

புகையிரதம் தடம்புரண்டு விபத்து

ජාතික ආරක්ෂාවට උපදේශක මණ්ඩලයක්