உள்நாடு

பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தம்

செவ்வாய்க்கிழமை (01) நடைமுறைக்கு வரவிருந்த 2.5% பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிப்பே இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பஸ் கட்டண அமைப்பை மீண்டும் பரிசீலிக்க தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேச்சாளர் தெரிவிக்கையில், முன்னதாக அறிவிக்கப்பட்ட 2.5% கட்டணக் குறைப்பு இன்று நடைமுறைக்கு வராது.

எரிபொருள் விலை மாற்றத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்த பிறகு, ஒரு புதிய கட்டண அமைப்பு வெளியிடப்படும் என்றார்.

Related posts

சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா!

editor

பேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று தீர்மானம்

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்