வணிகம்

பழ உற்பத்தி

(UDHAYAM, COLOMBO) – ழ உற்பத்தியை அதிகரிப்பதன் தேவையை இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் மத்தியில் இதற்கு கூடுதலான கேள்வி நிலவிய போதிலும் நாட்டில் பழ உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்தியில் நேரடி தொடர்புகளை முன்னெடுப்பதற்கும் வர்த்தக உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையை விரிவுபடுத்துவதுமே இதற்கு தீர்வாகும் என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2015ம் ஆண்டில் நாட்டின் பழ உற்பத்தி 15 தசம்  ஆறு சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. கடந்த வருடத்தில் இது ஆறு சதவீதமாக மேலும் வீழ்ச்சியடைந்தது. இந்த நிலைக்கு மத்தியில் பழ இறக்குமதி அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்டதில் பழ இறக்குமதியை முன்னைய  வருடத்துடன் ஒப்பிடுகையில் 19 தசம் எட்டு சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதற்கமைவாக இந்த வருடத்தில் பழ இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் வர்த்தக ரீதியிலான துண்டுவிழும் தொகை 130 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முதல் Green Super Supermarket இலங்கையில்

மீன் இறக்குமதியை வரையறுக்க தீர்மானம்

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்