உள்நாடு

பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் லெல்லம பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர், மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், இவர் பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இளைஞன் காணாமல் போன சம்பவம் – முன்னாள் கடற்படை தளபதி கைது

editor

இன்றும் மழை பெய்யும்

editor

யாழ்ப்பாணத்தில் நூலகம் ஒன்றை திறந்து வைத்தார் ரில்வின் சில்வா

editor