உள்நாடுபிராந்தியம்

பல்துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.

பல்துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மூதூர் கலாச்சார மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது திருகோணாமலை மாவட்டம் முழுவதும் கல்வி பொதுதர சாதாரண தரப் பரிட்சையில் 9 ‘ஏ’ சித்தியடைந்த மாணவர்கள், , தரம் 5 புலமை பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபில்கள் மற்றும் இம்முறை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட கௌரவப் பிரதேச உறுப்பினர்கள் , உயர் அதிகாரிகள் , சமூக சேவையாளர்கள் இதன் போது கௌரவிக்கப்படனர்.

இந்நிகழ்வானது அனர்த்த நலன்புரி சங்கத்தின் தலைவர் முஹம்மது யூசுப் முஹம்மது லாபிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக திகாமடுல்ல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உதுமான் மற்றும் முஜிப் சட்டத்தரணி கலந்து கொண்டனர்

அத்துடன் சமூக, மத மற்றும் கல்வி துறையைச் சேர்ந்த தலைவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

ராஜபக்சர்களுக்கு நான் எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல – ஜனாதிபதி ரணில்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – ஒருவர் பலி – மூவர் படுகாயம்

editor

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம் – ரஞ்சித் மத்தும பண்டார

editor