உள்நாடு

பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்படுமா?

(UTV | கொழும்பு) – நாட்டில் பல்கலைக்கழக முறைமை முழுமையாக ஆரம்பிக்கப்படுவதற்கான திட்டவட்டமான திகதியை அறிவிக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி பெறுகிறார்கள், இது கொவிட் தொற்றினை அதிகரிக்கும் கொத்தணியாக மாறும் அபாயத்தை கொண்டுள்ளது.

இதன்படி, பல்கலைக்கழக முறைமை தற்போதுள்ள 50 வீத கொள்ளளவில் தொடர்ந்தும் இயங்கும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி அநுர

editor

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை

வீடியோ | தெஹிவளை பாதியா மாவத்தை பள்ளிவாசலுக்கு எதிரான வழக்கு வாபஸ்

editor