பலஸ்தீன மக்களின் நலனுக்காக தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது.
பலஸ்தீன மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், உணவு, மருத்துவம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் தேவையான ஆதரவுகளை சவூதி அரசு வழங்கி வருகிறது.
சவூதி அரேபியாவின் மனிதாபிமான மையமான “KSRelief” மூலமாக அவசர தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விமானம், கப்பல் மற்றும் தரை வழியாக பல்வேறு உபகரணங்கள், மருந்துகள், மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வி, சுகாதாரம் மற்றும் புனரமைப்பு போன்ற துறைகளிலும் சவூதி அரசு நேரடியாக பங்களித்து வருகிறது.
பலஸ்தீன மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள், காயமடைந்தோருக்கான சிகிச்சைகள், சேதமடைந்த கட்டிடங்களுக்கான மறுசீரமைப்புகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மேலும், சர்வதேச ரீதியிலும் பலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சிகளில் சவூதி அரேபியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இஸ்லாமிய சகோதரத்துவத்தின் அடிப்படையில், நீதி மற்றும் மனிதாபிமானம் சார்ந்த நிலைப்பாடுகளை வலியுறுத்தி வருகின்றது.
இந்தத் தொடர்ச்சியான உதவிகள், சவூதி அரேபியாவின் ஆழமான பொறுப்புணர்வையும், பலஸ்தீன மக்களுக்கான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன.
-ஆக்கம் எஸ். சினீஸ் கான்