உலகம்

பலஸ்தீன இராச்சியத்தை அங்கீகரிக்க பிரித்தானியாவின் 60 எம்.பிக்கள் வலியுறுத்து

பலஸ்தீன இராச்சியத்தை அங்கீகரிக்குமாறு பிரித்தானியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் லம்மிக்கு அவர்கள் கடிதமொன்றையும் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், காசாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இன அழிப்பு நடவடிக்கையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதோடு பலஸ்தீன இராச்சியத்தை உடனடியாக அங்கீகரிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரனைப் பின்பற்றி பலஸ்தீன இராச்சியத்தை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி, பலஸ்தீன இராச்சியத்தை முறையாக அங்கீகரிப்பதற்கான திட்டங்களையும் அறிவித்தார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ​போது பிரான்ஸ் ஜனாதிபதி, பலஸ்தீன இராச்சியத்தை முறையாக அங்கீகரிப்பது அமைதிக்கான ஒரே பாதை என்றும் இரு நாட்டு தீர்வுக்கான அரசியல் உந்துதலை உருவாக்க உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

-அல் ஜசீரா

Related posts

அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழப்பு

ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று

ஈரானில் ஒரு இலட்சத்தை தாண்டிய நோயாளிகள் எண்ணிக்கை