உள்நாடு

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்

ஸாகிரா கல்லூரி A/L பெறுபேறு பிரச்சினைக்கு இந்த வாரம் தீர்வு : கல்வியமைச்சர்

களனி பல்கலைகழக சிசிரிவி ​விவகாரம் – நால்வருக்கு விளக்கமறியல்