உள்நாடுகாலநிலை

பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு!

‘தரம் 05 பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கை நிராகரிப்பு

வரவு செலவுத் திட்டம் இன்று