உள்நாடு

பல மாதங்களாக நீடித்த லாஃப் சமையல் எரிவாயு தட்டுப்பாடு வழமைக்கு

பல மாதங்களாக நீடித்து வந்த லாஃப் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு பற்றாக்குறையால் நுகர்வோர் அவதிப்பட்டு வருவதாகவும், வளைகுடா போர் சூழல் காரணமாக எரிவாயு ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு சரக்குக் கப்பல் நேற்று (24) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், விநியோக நடவடிக்கைகள் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே. வேகபிடிய தெரிவித்திருந்தார்.

மேலும், எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

 கருத்தரங்குகளுக்கு தடை

வரலாறு காணும் AstraZeneca : ஒரு இலட்சம் பேருக்கு ஏற்றம்