உள்நாடு

பல பிரதேசங்களில் 9 மணி நேர மின்தடை அமுலுக்கு

(UTV | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்திற்கு பல பிரதேசங்களில் மின்தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த மின்துண்டிப்பு நாளை(12) காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.

உயர் மின் அழுத்த – தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, சந்தர் கடையடி, கரவெட்டி, சாமியன் அரசடி, நெல்லியடி – கொடிகாமம் வீதி, கிழவி தோட்டம், இந்திர அம்மன் கோவிலடி, தாமரைக் குளத்தடி, கலிகை, வெலிக்கந்தோட்டம், துன்னாலை, யாக்கரு, சாவகச்சேரி புகையிரத நிலையம், சாவகச்சேரி நகரம்,

பலாலி வீதியில் இருந்து முலவை சந்தி வரை, புகையிரத நிலைய வீதி, மார்ட்டீன் வீதி, 1,2,3,4, ஆம் குறுக்குத் தெருக்கள், கொன்வென்ட் பாடசாலை, ஓடக்கரை வீதி, டேவிட் வீதி, சென். பற்றிக்ஸ் வீதி, யாழ். புகையிரத நிலையம் ஆகிய பிரதேசங்களில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நஷ்டம் தரும் அரசு நிறுவனங்களில் CEYPETCO இற்கு முதலிடம்

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி