உள்நாடுகாலநிலை

பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

editor

லக்ஷ்மன் – ரிஷாத் விசாரணை ஆணைக்குழுவில்

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !