சூடான செய்திகள் 1

பல கோடி ரூபா பெறுமதியான பாரிய தொகை ஹெரோயின் மீட்பு

(UTV|COLOMBO)-பலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சுமார் 234 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 2777 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்

editor

அலோசியஸின் சிறை கூண்டில் சிக்கிய சிம் அட்டைகள் பல குற்றங்களுடன் தொடர்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வட மாகாணத்திற்கு விஜயம்