உள்நாடு

பரீட்சை தினங்கள் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவது குறித்த திகதி இன்று (20) அறிவிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும், பரீட்சைகள் ஆணையாளருக்கும் இடையில் இது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலைமையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நிலைமையை கருத்தில் கொண்டு மேற்படி இரு பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக திகதி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

“வெளிநாட்டு கையிருப்பு சரிந்துவிட்டது” – முஜிபுர் ரஹ்மான் [VIDEO]

“மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஹரின், மனுஷ கட்சியில் இருந்து இடைநிறுத்தம்