உலகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் | வீடியோ

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது.

88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் வத்திகான் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சனிக்கிழமை தொடக்கத்தில் “நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறால் பாப்பரசரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளது.

மேலும் அவருக்கு இரத்தமாற்றம் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கத்தோலிக்கர்களை வத்திகான் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வத்திகான் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வீடியோ

Related posts

இதைவிட சிறப்பாக போராட உலகம் தயாராக இருக்க வேண்டும்

எமது தாக்குதல் கத்தாருக்கு எதிரானது இல்லை – ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு

editor

27 இந்திய மீனவர்களை விடுதலை செய்யகே கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!