உள்நாடு

பயிற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க புதிய திட்டம்

(UTV | கொழும்பு) –     நாட்டின் அனைத்து கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான, மக்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அதன் படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் பின்னர், தற்போதுள்ள 19 கல்வியற் கல்லூரிகளை ஒன்றிணைத்து ஒரு பல்கலைக்கழகமாக அமைத்து, அதில் பீடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த பல்கலைக்கழகத்தினூடாக பட்டதாரிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் , பாடசாலைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியரை தாண்டி பயிற்றுவைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியரை நியமிக்க அவர் எதிர்ப்பார்ப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கொலை மற்றும் கப்பம் கோரலுடன் தொடர்புடைய “பூயிடா” கைது

பியர் ஏற்றி சென்ற கொள்கலன் விபத்து

editor

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு இந்தோனேசியாவின் உதவி – தூதுவர் உறுதி

editor