உள்நாடு

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

   

Related posts

 வெளிநாடு செல்ல முடியாததனால் உயிரை விட்ட இளைஞன்

நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் – வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்