உள்நாடு

பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் ரயில், பேரூந்து இயங்காது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில், எந்தவொரு ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள் நீக்கப்படும் காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு

COPE குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

சுமார் 998 கிலோ கிராம் வெடி பொருட்கள் சிக்கின