உள்நாடு

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் வி. சகாதேவன் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அந்தப் பதவியை உராஜினாமா செய்வதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நியமனத்துக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னர் முன்னெடுக்கப்பட்டன. மேலும் பனை அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாண அலுவலக ஊழியர்களும் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், அந்தப் பதவியை வகிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும், ஜனாதிபதி அவரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

Related posts

ஐந்து மாவட்டஙகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்

விபத்தில் சிக்கி உயிரிழந்த சருகுப் புலி குட்டி