உலகம்

பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் பலி

(UTV | ஈரான் ) –  ஈரானில் பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அல்போர்ஸ் மலையில் நேற்று 20-க்கும் அதிகமானோர் குழுவாக இணைந்து மலையேறியுள்ளனர். அதற்கு முன்னதாக இரவு நிலவிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக மலைத்தொடரில் பனியின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது

வீரர்கள் மலையேறிய போது மலையின் ஒரு பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் மலையேறிய அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

அதில் மலையேறு வீரர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பனிப்பொழிவு தொடர்பான வானிலை மாற்றங்களை சரியாக கணிக்காமல் மலையோற்றத்தில் ஈடுபட்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி

இனவெறிக்கு நமது மௌனம் உடந்தையாக இருக்கிறது

சீனாவின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு