உலகம்

பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

(UTV|துருக்கி)- துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 33 பேர், மீண்டும் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கி நாட்டில் தற்போது நிலவும் கடும்குளிர் காரணமாக அந்நாட்டில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் வான் மாகாணத்தில் உள்ள பாசெசேஹிர் மாவட்டத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது.

சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் காணமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.’

இந்நிலையில், இரண்டாவதாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த 33 வீரர்கள் உயிரிழந்ததாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் மீட்புப்படை வீரர்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எத்தனை பேர் காணாமல் போயிருக்கலாம் என்ற புள்ளிவிவரத்தை அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷுக்கு IMF ஆதரவு

ட்ரம்ப் இனது YouTube கணக்கும் முடங்கியது

ஒரு வாரத்துக்கு ஆப்கானிஸ்தான் எல்லையை மூடுவதற்கு பாகிஸ்தான் அரசு தீர்மானம்