விளையாட்டு

பந்துவீச்சு பரிசோதனைக்காக அகில இந்தியாவிற்கு பயணம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய தமது பந்துவீச்சு தொடர்பிலான பரிசோதனைக்காக இன்று(28) இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மற்றும் நியூசிலாந்து அணியின் தலைவர் ஹேன் வில்லியம்சன் ஆகியோரின் பந்து வீச்சு முறைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்திருந்தது.

14 நாட்களுக்குள் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி தொடர்பில் பரிசோதனை நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக தலைமை அதிகாரியான ஜெரோம் ஜெயரத்னவும் இந்த பரிசோதனைக்காக அகில தனஞ்சயவுடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி

நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டது

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி : ஒளிபரப்ப தடை விதித்த தலிபான்