உள்நாடு

பந்துல, பிரசன்ன மற்றும் விமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி, விசாரணைக்கு தேவையான அடிப்படை உண்மைகளை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று பதிவு செய்ய உள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, மே 09 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட பல உள்ளுராட்சி மன்றத் தலைவர்களும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

editor

எல்பிட்டியவில் நடந்தது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அல்ல என பொலிஸார் தெரிவிப்பு

editor

இலங்கை பெண்களுக்கு இலவசமாக ஜப்பானில் வேலை வாய்ப்பு