வகைப்படுத்தப்படாத

“பதிலடி தர முடியும் என்பதைக் காட்டவே இந்த நடவடிக்கை” – இம்ரான் கான்

தங்கள் மீது அத்துமீறல் திணிக்கப்பட்டால் பதிலடி தர முடியும் என்பதைக் காட்டவே இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலுக்கு அமைய;

நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், எந்த வித பாதிப்பும், உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. எங்கள் மீது அத்துமீறல் திணிக்கப்பட்டால் எங்களால் பதில் தாக்குதல் நடத்த முடியும் என்பதை இந்தியாவுக்குக் காட்டவே இந்த நடவடிக்கை, இறையாண்மையுள்ள எந்த நாடும் மற்றொரு நாடு நீதிபதியாகவும், தண்டனை அளிப்போராகவும் மாறுவதை அனுமதிக்க முடியாது. அதனால்தான், அத்துமீறல் நடந்தால் பதிலடி தருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியாவிடம் வலியுறுத்தினோம்.” எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Libya migrants: UN says attack could be war crime

இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன

தீப்பரவல் காரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்