உள்நாடு

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட தூர பயணங்களுக்கு சுமார் 50 மேலதிக பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

நத்தார் தினமான நாளை (25) பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இராஜினாமா

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்