வணிகம்

பண்டிகை காலங்களில் கோழி இறைச்சியின் விலை கூடலாம்

(UTV | கொழும்பு) – பண்டிகை காலங்களில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கக் கூடும் என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.

‘ …சந்தையில் உருவாக்கப்பட்டிருக்கும் வர்த்தக மாபியா காரணமாக, பண்டிகை காலங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 ரூபாயை தாண்டக்கூடும். விலங்கு தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, உற்பத்தியாளர்கள் சாதாரண விலையில் இறைச்சி வழங்குவதிலிருந்து விலகுகிறார்கள் எனவும் சந்தையில் கோழி பற்றாக்குறையை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்..

இந்நிலையில், வரும் பண்டிகை காலங்களில், கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கு இறைச்சிக்கான பற்றாக்குறையை பயன்படுத்திக் கொள்வார்கள்..” என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சந்தை விலை 550-600 ரூபாய் வரையிலும், ஒரு முட்டையின் மொத்த விலை 12 ரூபாயாகவும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

உள்நாட்டு பாற்பண்ணைத் துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

மத்திய வங்கியின் சலுகை காலம் நீடிப்பு

‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா – துருணு திரிய’ – முன்னிலையில் காலி மாவட்டம்