சூடான செய்திகள் 1

பணி நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா?

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணி நிறுத்தப் போராட்டத்தை மேலும் தொடர்வது சம்பந்தமாக இன்று தீர்மானிக்க உள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

நேற்று முன் தினம் 04.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் இன்று மாலை 04.00 மணிக்கு முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் இதுவரை தீர்வு வழங்காமையின் காரணமாக இன்று காலை நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்குப் பதிலாக பணியாளர்களை அடக்குவதற்கு அதிகாரிகள் முயற்சிப்பதாக புகையிரத தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பீ.விதானகே கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு

இன்று(13) மாலை ஐ.தே.முன்னணியின் விஷேட பாரளுமன்ற குழுக் கூட்டம்