கிசு கிசு

பசில் – ரணில் இடையே இன்று முக்கிய சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்றைய தினம் (18) சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தற்போதைய நிலைமை, எதிர்காலத்தில் புதிய அரசாங்கமொன்றை அமுல்படுத்துவதற்கான திட்டங்கள் என்பனவும் இதில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு கைமாறும் twitter

மே 9ம் திகதி நடந்தது இதுதான் – அநுரவின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ரமேஷ்

சமந்தா நடிக்க கணவர் தடையா?