வகைப்படுத்தப்படாத

பங்காளதேசம் மீது ‘மோரா’ புயல் தாக்கியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – வங்கக்கடலில் உருவான மோரா புயல் இன்று பங்காளதேசத்தை தாக்கியுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் பங்கதேசத்தின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ்நகருக்கும் இடையே  புயல் கரையைக் கடந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

புயல் கரையை கடக்கும் போது 117 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கனமழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்ததையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே அதிகாரிகள் கரையோரப் பகுதிகளில் இருந்த 3 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

புயலால் ஏற்பட்ட சேதம்  குறித்து எந்த தகவலும் இல்லை. மீட்பு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மருத்துவர்களுக்கான விமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

Boris Johnson to form Govt. as UK’s new Premier

வணிக வளாகத்தில் தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு…