பங்களாதேஷில் விமானப் படை பயிற்சி விமானமொன்று இன்று (21) பகல் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மாணவர்கள் 16 பேர், ஆசிரியர்கள் இருவர், விமானத்தைச் செலுத்திய விமானப்படை வீரர் எனப் 19பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக ஜமுனா தொலைக்காட்சி தெரிவித்தது.
சீனத் தயாரிப்பான F-7 BGI 701 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாடசாலை நேரம் நடந்த இந்தச் சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மாணவர்கள் தீக்காயங்களுடன் ஓடி வரும் காட்சியை ஊடகங்கள் ஒளிபரப்பின.
இந்தச் சம்பவத்தையடுத்து நாளை தேசிய துக்க தினம் அனுட்டிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.