அரசியல்உள்நாடு

பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களைத் மீண்டும் திறக்குமாறு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை

திறக்கக்கூடிய நிலையில் உள்ள பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை (01) முதல் மீண்டும் திறக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

அனர்த்த நிலைமையின்போது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகளின் மற்றும் நிபுணர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை அவசியம்.

எனவே, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்குமாறு அனைத்துப் பராமரிப்பு நிலையப் பொறுப்பு அதிகாரிகளிடமும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

Related posts

13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி – விமல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நோர்வே தூதுவரை சந்தித்தார்

editor

இதுவரை 29,882 பேர் பூரணமாக குணம்