அரசியல்உள்நாடு

நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது – சுமந்திரன் எப்படி வந்தாரோ அதேபோல துரத்தப்படுவார்.

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது.

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி TNA க்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என தெரிவித்தார்.

Related posts

இன்றைய மின்வெட்டு நேரத்தில் நீடிப்பு

இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது – சர்வதேச நாணய நிதியம்

editor

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு கடவுச்சீட்டு ஒருநாள் சேவை தொடர்பில் வெளியான தகவல்

editor