சூடான செய்திகள் 1

நேற்று நாடுகடத்தப்பட்டவர் குற்றத்தடுப்பு பிரிவில்…

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்ட 52 வயதான அபூபக்கர் மொஹமட் பதூர்தீன் என்பவர், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் மாகந்துரே மதூஷ் மற்றும் கஞ்சிபான இம்ரான் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் அண்மையில் டுபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் வைத்து, பாதள உலகக்குழு தலைவர் மாக்கந்துரே மதூஷ் உடன் கைது செய்யப்பட்ட 31 பேரில், 30 பேர் இதுவரையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

நாட்டின் கல்விக்கொள்கை மாற்றம் அடையக்கூடாது

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ! (பட்டியல் இணைப்பு)