உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு) இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2511 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய, அவர்களில் 43 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிலும், 14 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக கடமையாற்றிய ராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், அவரின் பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனைகளின் மூலம் உறுதியாளியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 520 பேர் வைதியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியில் முயற்சியான்மை கழகம் ஸ்தாபிப்பு!

கஹத்த பகுதியில் துப்பாக்கி சூடு – 22 வயது இளைஞன் பலி – மற்றொரு இளைஞன் வைத்தியசாலையில்

editor

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை – 10 நாட்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்