உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

நேபாளத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு மத்தியில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்ந்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை தூதரக அதிகாரிகளை +977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் எப்போதும் தண்ணீர் மற்றும் உலர் உணவுகளை அருகிலேயே வைத்துக்கொள்ளுமாறும், மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் எப்போதும் அவற்றை தங்களிடமே வைத்துக்கொள்ளுமாறும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷாரா ரொட்ரிகோ அறிவுறுத்தியுள்ளார்.

நேபாளத்தின் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் பல சமூகத் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் 22 மாணவர்கள் உட்பட 99 இலங்கையர்கள் உள்ளதுடன், அதில் தூதரக ஊழியர்களும் அடங்குவதாகவும் இதுவரை எந்த இலங்கையர்களும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு