உள்நாடு

நேபாளத்திலிருந்து இலங்கை வந்த 93 மாணவர்கள்

(UTV|கொழும்பு) – உயர் கல்விக்காக நேபாள நாட்டிற்கு சென்ற 93 பேர் இன்று பிற்பகல் 3.27 இற்கு யூ எல் 1425 என்ற விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதன்படி, அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் மும்பையில் உள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர விசேட விமானம் ஒன்று நாளை இந்தியா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

editor

பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும்?

editor

இலங்கையின் கடல் எல்லையில் கடும் பாதுகாப்பு