சூடான செய்திகள் 1வணிகம்

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க – வர்த்தமானி அறிவித்தல்

விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லிற்கான உத்தரவாத விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவையின் அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கப்போவதாக அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், இம்முறை சில இடங்களில் நெல் அறுவடையைப் பெற முடியவில்லை என்று தெரிவித்தார். பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் சார்ந்த நெற்செய்கைகளில் மாத்திரமே அறுவடை கிடைத்தது. கடந்த பல வருடங்களாக விவசாயிகளின் நெல்லுற்பத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

இம்முறை கொள்வனவு செய்யும் ஒரு கிலோ நாட்டரிசியின் விலையை 5 ரூபாவால் அதிகரித்து, 38 ரூபாவில் இருந்து 43 வரை உயர்த்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சம்பா நெல்லின் விலையும் 41 ரூபாவில் இருந்து 46 ரூபாவிற்கு அதிகரிக்கப்படும். கட்டுப்பாட்டு விலை விதிக்கையில், தனியார் வர்த்தகர்களும் இவற்றை விட கூடுதலான விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய முற்படுவார்கள் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(அரச தகவல் திணைக்களம்)

Related posts

அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்கின்றது – சாணக்கியன் எம்.பி காட்டம்

editor

300 ஏக்கர் நிலப்பரப்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மரமுந்திரிகை உற்பத்தி

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை