கிசு கிசுவிளையாட்டு

நெய்மர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா?

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டின் தேசிய காற்பந்து அணித் தலைவர் பதவியில் இருந்து புகழ்பெற்ற வீரர் நெய்மர் நீக்கப்பட்டு அந்த பதவியில் டேனி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி எட்டு மாதங்களுக்கு முன்னர் நெய்மருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.

எனினும் அவர் அதிக மன அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள நிலையில், அணித் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

27 வயதான நெய்மரும், 36 வயதான அல்விஸும், பாரிஸ் சென்.ஜேர்மெயின் கழகத்தில் ஒன்றாக விளையாடுகின்றவர்களாவர்.

அல்விஸ் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் பிரேசில் காற்பந்து கழகத்துக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

தீக்காயமடைந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய தீயணைப்புப் படையினர்?

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து ஷிகார் தவான் விலகல்

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி – இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்திய சுமேத ரணசிங்க

editor