எல்லைத்தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 3 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டு, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அவர்கள் இன்று (28) முற்பகல் 11 மணியளவில் ஊர்காவற்றுறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
-பிரதீபன்
