உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் கோர விபத்து – 21 வயதுடைய இளைஞன் பலி

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் நேற்று (21) இரவு உபப்புசல்லாவ – நுவரெலியா பிரதான பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவர்.

இருப்பினும் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

-செ.திவாகரன்

Related posts

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு

பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது – பஷீர் சேகுதாவூத்

editor

வீடியோ | இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆஷிக் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.!

editor