உள்நாடுபிராந்தியம்

நுவரெலியா, நானுஓயாவில் கடும் மழையினால் வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதில் நானுஓயா நகரில் போக்குவரத்து செய்யும் பிரதான வீதி ஊடாக வெள்ள நீரினால் நிரம்­பி­யதால் நுவரெலியா – ஹட்டன் பிர­தான வீதி­யில் போக்­கு­வ­ரத்தும் சில மணி நேரம் பாதிக்­கப்­பட்­டது.

மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெஸ்போட், கிரிமிட்டி, கார்லிபேக் போன்ற பிரிவுகளில் தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பலரின் வீடு­க­ளுக்குள் வெள்­ளநீர் உட்­பு­குந்­ததால் பிர­தேச மக்­களும் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளை எதிர் நோக்கி வருகின்றனர்.

இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் அடை மழை கார­ண­மாக இப்­ப­குதி விவ­சாய நிலப்­ப­ரப்­புகள் முற்­றாக நீரினால் நிறைந்­துள்­ளன எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இன்னும் சில மணி நேரம்

பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

முட்டை இறக்குமதிக்கு அனுமதி – நளின் பெர்னாண்டோ.