உள்நாடுசூடான செய்திகள் 1

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!

(UTV | கொழும்பு) –

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது. இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் மற்றுமொரு இயந்திரம் இதற்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூன் மாதம் இந்த இயந்திரத்தின் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன்படி, தற்போது நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் ஒரு இயந்தரம் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த இயந்திரத்தின் ஊடாக தேசிய மின் அமைப்பிற்கு 300 மெகாவோட் சேர்க்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

A/L உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

கொரோனா : பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு