உள்நாடு

நுகேகொடை மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி, லொறியுடன் மோதி விபத்து – இளைஞர் பலி

ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மீகமவத்தை, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

editor

எந்தவொரு குற்றத்தையும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர

editor

அரிசி தட்டுப்பாடு இருக்காது