வகைப்படுத்தப்படாத

நீர்ப்பாசன பொறியியலாளர்களும் இன்று சுகயீன விடுமுறை

(UDHAYAM, COLOMBO) – அனைத்து நீர்ப்பாசன பொறியியலாளர்களும் இன்று சுகயீன விடுமுறை செய்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பதவிக்கு நீர்ப்பாசன துறையில் அனுபவம் அற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த தசாப்தங்களில் செயலாளர் பதவிக்காக அந்த திணைக்களத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவர் நியமிக்கப்படுவதே வழக்கமாக இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் சங்கம் கூறியுள்ளது.

இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உரிய அமைச்சர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் சரியான பதில் கிடைக்கவில்லை என்று அந்த சங்கம் கூறியுள்ளது.

Related posts

තේ දළු මිල පහත වැටෙයි

STF ஐ நீக்க நடவடிக்கை!

Train strike from midnight today [UPDATE]