சூடான செய்திகள் 1

நீர்த்தேக்க பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-மத்திய மலை பிரதேசத்தின் மேற்கு பகுதியில் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்துவருகின்றது.

மேல் கொத்மலை வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் இந்த நீர்த்தேகத்தின் வான் கதவுகள் உடனடியாக திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொத்மலை தாழ்நிலபிரதேசத்தின் இருமருங்கிலும் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று மின்உற்பத்தி பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் மழை காரணமாக டெவோன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சென்கிலேயர் நீர்வீழ்ச்சியின் நீர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேக நபர் புத்தளம், பாலாவியில் கைது

editor

அர்ச்சுனா MP யின் அதிரடி அறிவிப்பு – MP பதவி கௌசல்யாவிற்கு

editor