நீர்கொழும்பு பெரியமுல்லையில் உள்ள எட்டுக்கல ரயில் கடவைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஜீப்பில் பயணித்த நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நேற்று (09) அதிகாலை குறித்த ஜீப்பை சோதனை செய்தபோது, சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் கஞ்சா, 01 கிராம் கோகைன் மற்றும் 100 போதைப்பொருள் மாத்திரைகள கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர் நீர்கொழும்பில் வசிக்கும் 32 வயதுடையவர்.
சந்தேக நபரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, அவர் தங்கியிருந்த விடுதி அறையில் 29 கிராம் 240 மில்லிகிராம் குஷ் மற்றும் 2 கிராம் 230 மில்லிகிராம் அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர், சந்தேக நபருக்குச் சொந்தமான ஒரு மருந்துக் கடையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 1,000 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது
