உள்நாடு

நீர்கொழும்பில் வௌிநாட்டு துப்பாக்கியுடன் வர்த்தகர் கைது

சுமார் 6 அங்குல நீளமுள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைத்துப்பாக்கி பெல்ஜியம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரௌனிங் (Browning) ரகத்தைச் சேர்ந்தது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் விசாரணை பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது சந்தேகநபரின் வீட்டைச் சுற்றிவளைத்தபோது, அறையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான வர்த்தகரிடம் துப்பாக்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, அது உயிரிழந்த தனது தந்தையிடமிருந்து தனக்குக் கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சீனாவில் பரவிவரும் வைரஸ்; சுகாதார அமைச்சின் அறிவிப்பு

அரசுக்கு எதிரான SJB தலைமையில் இன்று கொழும்பில் மாபெரும் பேரணி

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!